Friday, April 10, 2020

SHARE MARKET BASICS IN TAMIL - PART 3 - ABOUT SHARE MARKET INVESTMENT

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் என்னென்ன விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்?
WHAT ARE THE THINGS TO DO BEFORE INVESTING IN SHARE MARKET

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பங்குச் சந்தையின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வது எப்போதும் புத்திசாலித்தனம்பங்குச் சந்தை அடிப்படைகளுக்கான புத்தகங்கள் மற்றும் வீடியோ பயிற்சிகளை நான் தொகுத்துள்ளேன்பங்குகளை வர்த்தகம் செய்வதில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் பங்குச் சந்தையின் விதிமுறைகள் மற்றும் வாசகங்கள் பற்றிய விளக்கமும் இங்கே சேர்க்கப்பட்டுள்ளதுபாம்பே பங்குச் சந்தை (பிஎஸ்இ), தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), லண்டன் பங்குச் சந்தை (எல்எஸ்இஅல்லது நியூயார்க் பங்குச் சந்தை (என்ஒய்எஸ்இ), பங்குச் சந்தை எதுவாக இருந்தாலும்வர்த்தக விதிமுறைகள் மற்றும் வாசகங்கள் பெரும்பாலும் பொதுவானவை.

பங்குச் சந்தையில் ஏன் வர்த்தகம் செய்ய வேண்டும்?
WHY WE SHOULD TRADE IN SHARE MARKET?
1. சொத்து வாங்குவது மற்றும் மாத அடமானம் செலுத்துவது போலல்லாமல்பணம் சம்பாதிக்கத் தொடங்க உங்களுக்கு நிறைய பணம் தேவையில்லை.
2. வழக்கமான வணிகம் செய்வதைப் போலல்லாமல்வர்த்தகம் செய்வதற்கு மிகக் குறைந்த நேரம் தேவைப்படுகிறது.
3. ஒரு சொத்து அல்லது வணிகத்தை விற்பது போலல்லாமல்இதை நீங்கள் எளிதாக பணமாக மாற்றலாம்.
4. பங்குச் சந்தையிலிருந்து எவ்வாறு லாபம் பெறுவது என்பதைக் கற்றுக்கொள்வது எளிது.
ஆனால் நீங்கள் அடிப்படைகளை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்அவ்வாறு செய்யாவிட்டால்நீங்கள் உங்கள் நேரத்தை வீணடித்து பணத்தை இழப்பீர்கள்எனவேமுதலீடுகள்வர்த்தகம்நிறுவனம்பங்குகள்ஈவுத்தொகை மற்றும் பங்குகளின் வகைகடன் பத்திரங்கள்ஐபிஓ (IPO), எஃப் &  Future & Option Market, பங்குச் சந்தை எதைக் கொண்டுள்ளதுபரிமாற்றங்கள்குறியீடுகள்செபிபங்குகளின் பகுப்பாய்வு (Fundamental Analysis) - எதை வாங்குவது என்பதை எவ்வாறு சரிபார்க்க வேண்டும்?, வர்த்தகம் விதிமுறைகள், Limit order, Market order, Brokerage, Balance Sheet, Book value, Face value  போன்றவை தெரிந்து கொள்ள வேண்டும்.

தனியார் நிறுவனம் என்றால் என்ன ?
PRIVATE COMPANY
ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,
PRIVATE BUSINESS:
தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம்.
PARTNERSHIP BUSINESS:
சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால்அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்)
கம்பனி என்றால் என்ன ? 
What is meant by company?
மேலே கூறப்பட்ட Partnership என்பது முகம் தெரிந்தவர்களை மட்டும் சேர்த்து இயங்கக்கூடியதுஇவற்றுடன் முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம் செய்வதற்காக உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.
இந்த கம்பனிகள் ரெஜிஸ்டார் ஆப் கம்பனீஸ் (Registrar of Companies) என்னுமிடத்தில் பதிவு செய்யப்படுகிறதுஇதனால் அந்த கம்பனியின் கடன்களுக்கு அக்கம்பனியே பொறுப்புபங்குதார்கள் பொறுப்பல்ல. (பங்குதாரகள் என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது)

பங்கு என்றால் என்ன ?
What is meant by stock?
மேலே கூறப்பட்ட கம்பனிகள்முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.

பங்குச்சந்தை என்றால் என்ன ? 
What is meant by Stock Market?
பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்பங்குச்சந்தை ஆகும்இங்கு சிறு முதலீட்டாளர்கள்தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள்தரகர்கள் வரை பங்குபெறலாம்.
உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) ஆகும்உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New York Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hong Kong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.

பங்குச்சந்தை இரண்டு வகைப்படும்அவை (Different types of stock market)
முதன்மை பங்குச்சந்தை 
Primary Market
ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம் ( Issuing first stocks to public ) முதன்மை பங்குச்சந்தை ஆகும்இதற்கு .பி. ( IPO – Initial Public Offer ) என்று பொருள்.
இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை 
Secondary Market
முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை அனுக வேண்டும்ஒரு கம்பனி .பி. (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be listed in stockmarket). அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும்இப்பங்கின் நடப்பு விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.

பங்குதாரர் என்றால் என்ன ? 
What is Share Holder
பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள்இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (FaceValue) நிர்னயம் செய்வார்கள்இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோ விலை கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.

பங்கு தரகர்கள் என்றால் என்ன ? 
What is Stock Brokers?
பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர்இவர்கள் மட்டுமேபங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும்இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும்இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.

No comments:

Post a Comment